கண்ணன் கவிதைகள் - Tamilkavithai4you

 மாய கண்ணன்  ராதை  கவிதை கண்ணன் கவிதைகள் 💙

வெண்ணெயை திருடி விட்டான்

 கண்டீரோ யாரேனும் கண்டீரோ

கண்டீரோ யாரேனும் கண்டீரோ


கடைந்து வைத்த வெண்ணெயை காணவில்லை

கண்ணன் எங்கே கண்ணடீரோ


பானையை உடைத்து விட்டான் பாலகனை கண்டீரோ


கருமையின் தலைவன் அவன்

அகிலத்தின் அழகு அவன்

ஒப்பனைகள் அற்றவன்


துவாபர யுகத்தில் பிறந்து

கலியுக பெண்களை காதலில் விழ செய்தவன்


கையில் முராரி தரும் குழல் வைத்திருப்பான்

மயில் இறகை சிரசில் சூடி

களித்திருப்பான்


இடையில் தாய் தந்த தண்டனையில் தழும்பை

வைத்திருப்பான்


அழகே உருவான இராதையிடம்  சதா சண்டை இழுப்பான் இளம் மங்கையர் சூழ்ந்து காணப்படுவான்


அவன் நாமம் என்னவென்று யான் உரைப்பேன்


தாய் கண்ணன் என்று அழைப்பாள்

மங்கையர் கிருஷ்ணா என்றழைப்பர்

மாதவன்.,முகுந்தன்.,குறும்புக்காரன்., எந்த பெயரை உரைப்பேன்


எவரேனும் கண்டால் உரைப்பிர்

அவன் தன் பேச்சால் அனைவரையும் காதலில் விழ செய்பவன்

நானும் அவன் காதலில்

மூழ்கியவள் ஆவேன்💙

                                                  


ராதையின் கண்ணன் 💏💙💞 காதல் கவிதை 💙


பரந்து விரிந்த பாரினில்🌍

பாசம்💞 பட்டுப்போகுமோ⁉ கண்ணன்👑 வாழ்ந்த மண்ணில்


காதல் 💕விட்டுப் போகுமோ ‼


பல ஆயிரம் 🕦ஆண்டுகள்


கடந்தும்⏩.... பார்த்துக் 👀கொண்டே காதல்


காவியம் 💖தீட்டுகிறது📝 வானமும்


பூமியும் ⛅


அலை 🌊கரையை தொட்டு விட்டு


திரும்ப சென்றாலும் 💔பிரிய


மனம் 💘இல்லாமல் திரும்ப 💝வந்து


ஆர....தழுவி கொள்ளுவது போல்


👥 மார்கழி❄திங்களும் மாதவன்


பதம்👣 சேர மார்க்கம்


காட்டுகிறது➡

 மனமே 💗தாமதம்〰 எதற்கு ⁉ 


 கண்ணனை 👤காதலித்து💑 விடு💕💖 


அவன் கரம் 👫பிடித்து விடு💞💙

 கண்ணன் கவிதைகள்


நிலவின் ஒளியில்🌝


 நீயும் நானும்👩‍❤️‍👨💞 காதலிப்பதை கண்டு


 சூரியனுக்கு🌞 வருத்தமாம் 😟


என் கண்ணா😘🥰💙 



                                            

 

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate