காதலின் தூரம் அவன் அருகில் 💏💞💙 காதல் கவிதை 💙

 

என் தலையணை உன் தோள்களாக மாறாதோ⁉️

தூக்கம் இல்லாமல் தவிக்கும் என் இரவுக்கு துணையாக வாராதோ⁉️


நீயோ தொலைவில் இருந்து தொட்டு தொட்டு அணைக்க 

காதலை ஏக்கம் கடந்து விடுகிறது‼️


வாடை காற்றும்

 வானோடு நிலவும்

என்னை வாட்டி வதைக்கிறது😒


வான் மழை காணாத

வறண்ட நிலம் போல 

உன் வாசம் காணாமல் வறண்டு கிடக்கிறேன்🥺


 காதலோடு கட்டி அணைத்து சில 

முத்தங்கள் தா என்று 🍂🌹

கூற தடுக்கும் பெண்மை 


கூறாமல் இருந்தால் என் இதயத்தின் கூவல் உன் காதில் விழாதோ என்ற வருத்தம்😥😟


கார்காலம் வந்ததும் கூடும்

காதல் பறவைகளின் கொஞ்சல் மொழிகளை கேட்க 

என் இதயத்தில் வலிமை இல்லை💔😣


கோதை இவளின் ஏக்கம் அறிந்து

காதலின் தாகம் தீர்க்க வா💙

                ‌.                                -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate